" திருவள்ளுவர் காலம் முதல் நம் காலத்தில் பாரதியார் ,மறைமலையடிகள், திரு. வி . க . வரை பல தமிழ்ப் பேர் அறிஞர்கள் பேசியும் எழுதியும் வளர்த்துப் பண்படுத்திய பெருமொழி நம் தமிழ் மொழி . எயத்தனையோ இடை யுருகளுக்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மொழியும் பண்பாடும் இடையறாமல் வந்திருப்பது நம் தமிழின் ஒரு தனிச்சிறப்பு . அரசுகள் மாறின அமைசுகள் மாறின ஆனால் தமிழ்மொழியும் பண்பாடும் மாறாமல் வந்துள்ளன . அவ்வாறு இடையறாமல் வளர்ந்து வந்திருக்கும் இவ்விரு செல்வங்களையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு இளைங்கர்களுக்குண்டு "
அறுபது இரண்டாம் வருடம் செப்டெம்பெர் மாதம் எழாம் நாள் சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னை கலை மன்ற பொதுக்கூட்டத்தில் மு . வரதராசனார் பேசியது .
“ நான் யாரென்று கேட்டால் கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ்க் காதலன். தமிழைப் பெருங்கடல் என்று தமிழை அடக்கத்துடன் ஆராய்ந்து தட்டுத்தடுமாறித் தமிழ் பேசுகிற சிற்று}ழியன் நான். நான் தமிழை என் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறேன்”
7 – 9 – 1962 இல் சென்னை மாநிலக் கல்லூ¡யி¢ல் தமிழ்க் கலை மன்ற விழாவில் டாக்டர் கமில் சுவலபில் பேசியது
1 comment:
மதிப்புமிகு விரிவுரைஞர் ஐயா, வணக்கம்.
இன்றுதான் தங்கள் வலைப்பதிவை முதன்முறையாகப் பார்வையிடுகிறேன்.
பயன்மிகு பதிவுகளைக் கண்டேன். அதோடு, என்னுடைய வலைப்பதிவுகள் இரண்டனுக்கும் தொடுப்பு வழங்கி இருப்பதையும் கண்டேன்.
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா.
இனி, தொடர்ந்து தங்கள் வலைப்பதிவுக்கு வருவேன். மேலும், திருமன்றில் திரட்டில் தங்கள் வலைப்பதிவை விரைவில் இணைப்பேன்.
இணையம் வழி
இனியத் தமிழை
இணைந்து வளர்ப்போம்.
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்,
மலேசியா.
Post a Comment